SIKSASHTAKAM ( IN TAMIL)

  SIKSASHTAKAM ( IN TAMIL)
 
ceto-darpaṇa-mārjanaṁ bhava-mahā-dāvāgni-nirvāpaṇaṁ
śreyaḥ-kairava-candrikā-vitaraṇaṁ vidyā-vadhū-jīvanam
ānandāmbudhi-vardhanaṁ prati-padaṁ pūrṇāmṛtāsvādanaṁ
sarvātma-snapanaṁ paraṁ vijayate śrī-kṛṣṇa-saṇkīrtanam
 
தூசி படிந்த இதயக் கண்ணாடி  துடைக்கும்  
ஜடவாழ்வெனும்  காட்டுத்தீயை அணைக்கும் 
குளிர் சந்திரனாய்வளரும்  
வெண் தாமரையாய்விரியும்  
மங்கள வாழ்வு தனை நம் மேல் சொறியும்  
கல்விக்கு  வாழ்வும் உயிரும்  அதுவே ஆகும் 
ஆனந்த பெருங்கடலை  பெரிதாக்கிக்கொண்டே போகும்
வழங்கும் எல்லார்க்கும் ஆன்மீக அமிர்தம்  
அடையட்டும்  வெற்றி  ஸ்ரீ கிருஷ்ண சங்கீர்த்தனம் 
 
                                  2
 
nāmnām akāri bahudhā nija-sarva-śaktis
tatrārpitā niyamitaḥ smaraṇe na kālaḥ
etādṛśī tava kṛpā bhagavan mamāpi
durdaivam īdṛśam ihājani nānurāgaḥ
 
சகல சக்திகளும் உன்பெயர்களில் உரையும்  
கடந்தது அவை  நேரம் இடம்  காலம் மூன்றையும்  
பார்க்கவேண்டாம்  சொல்ல  விதி  நியமம்  எதையும் 
விழுந்த என் மேல் பொழிந்தாய் அருளும் கிருபையும் 
இருந்தும் உன் பெயரில் , துரத்ரிஷ்டத்தில்  நனையும்  
எனக்கு ஏன் வரவில்லை  பற்று ஒரு  துளியும்  
 
                                 3
tṛṇād api sunīcena
taror iva sahiṣṇunā
amāninā mānadena
kīrtanīyaḥ sadā hariḥ
 
தாழ்மையாக  விட புல்லை 
நினைக்கணும்   நம்மை  
இருக்கணும் கூடவே மரத்தோட பொறுமை 
மரியாதை எதிர்பார்த்தல் அடியோடு  தவிர்த்து 
அவைகளை  பிறருக்கு முழுதாக  அளித்து   
சொல்லி ஹரி என்னும் தேனான பெயரை 
நிற்காமல் செய்யணும்  எப்போதும்  பஜனை 
 
                                 4
 
na dhanaṁ na janaṁ na sundarīṁ
kavitāṁ vā jagadīśa kāmaye
mama janmani jamanīśvare
bhavatād bhaktir ahaitukī tvayi
 
வேண்டாம்  தனம் ,வேண்டாம் புகழ் பாடும்  ஜனமும்  
வேண்டவே வேண்டாம் அழகிய துணையும்  
ஒதுக்கினேன் கவிதை க் கர்ம வினையும்   
அடுத்து  நான் எடுக்கும்  ஜன்மங்கள் முழுதும்     
இல்லாமல் பதிலுக்கு  எதிபார்ப்பு எதுவும்   
செய்யணும் தொடர்ந்து நான் உன் பாத  தாமரை  சேவை 
எனக்கு உன்னிடமிருந்து  அந்த ஒரே ஒரு வரம் தான் தேவை 
 
                                 5
 
ayi nanda-tanuja kiṅkaraṁ
patitaṁ māṁ viṣame bhavāmbudhau
kṛpayā tava pāda-paṅkajasthita-
dhūlī-sadṛśaṁ vicintaya
 
கிருஷ்ணனே 
நந்த மஹராஜின் கோமகனே  
நான்  என்றென்றும் உனது சேவகனே 
விழுந்து விட்டேன் தவறி அக் ஞான  கடலில்
உன் தாமரை பாதத்தின் அழகான  மடலில் 
மீட்டு வைப்பாய் ஒரு துளி தூசியாய்  என்னை 
காட்டி காரணமில்லா உன் பெரும் கருணை  தன்னை 
 
                               6
 
nayanaṁ galad-aśru-dhārayā
vadanaṁ gadgada-ruddhayā girā
pulakair nicitaṁ vapuḥ kadā,
tava nāma-grahaṇe bhaviṣyati
 
உன் பேரை கிருஷ்ணா நான்  ஜெபிக்கின்ற சமயம் 
எப்போது  கண்களில் கண்ணீர் வந்து நிறையும் 
ஆறாக  அது  எப்போது கரை புரண்டு  ஓடும்  
உச்சரிப்பு  எப்போது  திக்கித் தடுமாரும் 
வார்த்தைகள்தொண்டையில்  எப்போது  சிக்கும் 
ரோமங்கள் எப்போது  செங்குத்தாய்  நிக்கும்
 
                              7
 
yugāyitaṁ nimeṣeṇa
cakṣuṣā prāvṛṣāyitam
śūnyāyitaṁ jagat sarvaṁ
govinda-viraheṇa me
 
ஒவ்வொரு வினாடியும்   ஒரு யுகம் 
கண்களில் கண்ணீர் மழை ஜலம் 
ஆகிவிட்டது சூன்யமாய்  உலகம் 
இதற்க்கெல்லாம் காரணம் அடித்தளம் 
கோவிந்தா உன் பிரிவெனும்  விரகம்  
 
                             8
                               
āśliṣya vā pāda-ratāṁ pinaṣṭu mām
adarśanān marma-hatāṁ karotu vā
yathā tathā vā vidadhātu lampaṭo
mat-prāṇa-nāthas tu sa eva nāparaḥ
 
அரவணைத்தாலும் இருக்க அணைத்து 
வதைத்தாலும் கால்களால்  மிதித்து 
உடைத்தாலும் இதயத்தை  சிதைத்து 
தோன்றாமல் கண்முன் அலைகழித்து  
செய்ய முடியும்எதை வேண்டுமானாலும் உன்னால் 
பெண்கள் எத்தனையோ பணி செய்ய  உன்  பின்னால் 
இருந்தும் பூஜிக்க முடியும்  நம்பணும்  சொன்னால் 
இதயத்தில் உன்னை மட்டுமே  என்னால் 
   
 

 

 
மொழிபெயர்ப்பு(Translation) : அனந்த கோபால்தாஸ் (JPS)
E-mail me when people leave their comments –

You need to be a member of ISKCON Desire Tree | IDT to add comments!

Join ISKCON Desire Tree | IDT