பக்தி வேதாந்த ஸ்வாமி பிரபுபாதா
தோன்றியது கொல்கத்தா
அம்மா ரஜனி பதிவிரதை கிருஷ்ண பக்தை
அப்பா கௌர் மோகன் ஊன்றினார் பக்தி வித்தை
கொடுத்து அழகிய கிருஷ்ண விக்ரகத்தை
அபய் அப்போது ஐந்து வயது தத்தை
செய்தான் அபய் ஒரு பொம்மை ரதத்தை
இழுத்தான் வைத்து ஜகன்னாத்தை
அபய் அப்பா நல்ல வைஷ்ணவர்
தன் கடை எலிகளுக்கு தான்யம் வைத்தவர்
அவரை பார்க்க வருவர் சாதுக்கள் பலர்
போலியாய் போனதுண்டு அதில் சிலர்
அபய்க்கு பிடிக்கவில்லை அவர்கள் வரவு
போட்டு பகல் வேஷம் துறவு
அப்பா சொல்கிறாரே என்று
அபய் சேவிப்பான் கடனே என்று
வளர்ந்தான் அபய் நன்று
படிக்க ஆரம்பித்தான் கல்லூரி சென்று
அப்போது அவருடைய ஹீரோ காந்தி
அவர் பின் போக நினைத்தார் இந்திய கொடி ஏந்தி
ஒரு நாள் நேர்ந்தது ஒரு திருப்பம்
நிறைவேற அவர் பற்றிய கிருஷ்ணரின் விருப்பம்
வந்திருக்கிறார் ஒரு சாது ரொம்ப பிரத்யேகம்
பார்க்கவேண்டும் நீ அவரை கட்டாயம்
சொன்னார் அபயின் நண்பர் ஒரு நன்னாள்
போனார் பாதி மனதோடு அபய் பின்னால்
பார்த்ததும் பக்தி சித்தாந்த சரஸ்வதி
சொன்னார் நண்பனிடம் "நீ சொன்னது சரி "
இவர் ஒரு தனி பிறவி, நிஜ துறவி
முகத்தில் எத்தனை தெளிவு
இல்லை மறைவு ஒளிவு
கண்களில் பக்தி சித்தாந்த ஒளி
தெரியும் வைகுந்தத்திற்கே வழி
"ஆங்கிலத்தில் உனக்கிருக்கு ஞானம்
சென்று உலகின் மூலை முடுக்குகள் யாவும்
கிருஷ்ண உணர்வு புகட்ட வேணும்"
சொன்னார் பக்தி சித்தாந்தா எடுத்த எடுப்பில்
அபய் ஆச்சர்யம் அடையும் வகையில்
"நாடு அடையவில்லை சுதந்திரம்
எப்படி பரப்ப நம் பாரம்பரியம்"
கேட்டார் அபய் காட்டி தயக்கம்
கிருஷ்ண உணர்வு ஒரு மிக முக்கிய விஷயம்
அனுமதிக்க கூடாது தாமதிக்க அதை எதையும்
காத்திருக்க கூடாது அது யாருக்கும் எதற்கும்
எல்லா அரசாங்கமும் தாற்காலிகம்
கிருஷ்ண உணர்வு மட்டுமே நிரந்தரம்
எது உண்மை சுதந்திரம் ?
உணர்வோம் கிருஷ்ணரின் நித்திய சேவகன் என்று
கிடைக்கும் நமக்கு உண்மை விடுதலை அன்று
பொது நல தொண்டு
அது தாற்காலிக விஷயங்களுக்கு அப்பாற்பட்ட ஒன்று
நமக்கும் கிருஷ்ணருக்கும் உள்ள உறவு
நிரந்தர ஆதி அந்தமற்ற உறவு
அதை எல்லா ஜீவன்களுக்கும் உணர்த்து
அடுத்த பிறவிக்கு தயார் படுத்து
இல்லை பொதுநல தொண்டு வேறு அதை விடுத்து
சொன்னார் பக்தி சித்தாந்தா கத்தரித்தால் போல் பட்டு
அப்போதே ஆனார் அவருக்கு அபய் கட்டு ப் பட்டு
மாறி விட்டார் அபய் அடியோடு
கட்டளையை நிறை வேற்ற வேண்டும் என்ற முடிவோடு
வெளியே வந்தார் தெளிவோடு மனநிறைவோடு
சங்கமத்தில் நிகழ்ந்தது அடுத்த சந்திப்பு
சிஷ்யனானார் எடுத்து சங்கல்ப்பு
ஆரபித்தார் பத்திரிகை பேக் டு காட் ஹெட், தலைப்பு
தொடங்கினார் பகவத் கீதா மொழிபெயர்ப்பு
வியாபாரம் போனது நொடிந்து
உறவுகள் போனது ஒடிந்து
மனைவியும் தரவில்லை ஒத்துழைப்பு
வரவில்லை அவர் மனதில் கிருஷ்ண லயிப்பு
ஒருநாள் இல்லாமல் துளியும் பொறுப்பு
விற்று ஸ்ரீ மத் பாகவத புத்தகத்தை
பெற்று விட்டார் தேநீர் பொட்டலத்தை
அன்றே நடந்தார் அபய சரண் விட்டகத்தை
சென்றார் நோக்கி விருந்தாவனத்தை
தொடர மொழிபெயர்ப்பு எனும் தவத்தை
ராதா தாமோதரர் கோவிலில் வாசம்
க்ரிஷ்ணரோடு மட்டும் தான் பந்த பாசம்
தேடி அச்சுக்கூடம்
தில்லிக்கு போவார் வாரா வாரம்
நூறு மைலுக்கு மேல் தூரம்
கொடுத்து வச்சது மதுரா பிளாட்பாரம்
பட்டிருக்கே பிரபுபாதா பாதம்
குரு அன்றிட்ட ஆணை
நிறைவேற்றும் அந்நாளை
நினைத்தே மெலிந்தார் நாலு வேளை
எழுதினார் பலருக்கு கடிதம்
அமேரிக்கா போகணும் துரிதம்
அங்கும் இங்கும் தேடி முடிவில்
வந்தது உதவி சுமதி மொரார்ஜி வடிவில்
ஜலதூதாவில் அமர்ந்தார் ஏறி
ஆகஸ்ட் பதிமூணாம் தேதி
கொண்டாடினார் கிருஷ்ணர் பிறப்பு
கொடுத்து கப்பலில் பிரசாத இனிப்பு
நீண்ட கடும் கடற் பயணம்
நடுவில் எத்தனை துயரம்
வந்தன மாரடைப்பு அடுத்தடுத்து
இருந்தார் கிருஷ்ணர் கால் பிடித்து
கப்பல் அடைந்தது நியூ யார்க்கு நகரை
யாருமில்லை வரவேற்க இவரை
ஊன்றி தன் பழைய குடையை
ஏந்தி தகர பெட்டியை
கட்டினார் நடையை
முதலில் அகர்வால் கூரை
பின்பு அமர்ந்தார் அடைந்து டாம்கின்ஸ் ஸ்கொயரை
பூஜித்து கிருஷ்ண சைதன்யரை
யாசித்து தன குருவின் கிருபையை
சொல்லி பாட ஆரம்பித்தார் கிருஷ்ணர் பெயரை
வாசித்துக்கொண்டே கர்தாலை
ஆட்டி அழகாய் தன் தலையை
மக்களை ஹரே கிருஷ்ணா மஹா மந்திரம்
இழுத்தது இரும்புதுகள்களை போல் காந்த யந்திரம்
பலர் கூடி பாடினர் ஆடி நடனம் .
பிறகு பேசினார் பிரபுபாதா சில நிமிடம்
"வரவில்லை எதையும் பெற கைகள் ஏந்தி
தர வந்தேன் கிருஷ்ண உணர்வெனும் பூந்தி"
சொல்லுங்கள் ஹரே கிருஷ்ணா மந்திரம்
அடையுங்கள் அளவிலா ஆனந்தம்
எல்லோருக்கும் பிடித்து போயிற்று
இஸ்கான் ஆரம்பமாயிற்று
ஆலமரமாயிற்று
ஒவ்வொரு கிளையிலும் பூரா உலகம்
பக்த பறவைகள் இட்டு திலகம்
நடத்துகின்றன கிருஷ்ண சங்கீர்த்தனம்
கொடுக்கின்றன கிருஷ்ணப்ரசாதம்
அம்பது வருடம் தான் ஆகுது
இன்னும் எவ்வளவோ காலம் இருக்குது
உலகம் முழுதும் சான்ட் பண்ணப் போகுது
அந்த நாளும் கண்ணுக்கு தெரியுது
சொல்லப்போறார் நாரதர் வந்திங்கு
நாராயணா! இல்லை இது பூலோகம்
சாக்ஷாத் அந்த கோலோகம்
அனந்த கோபால்தாஸ்
anandgopaldas
Comments