9773741680?profile=RESIZE_400xபோக்தாரம் யக்ஞ-தபஸாம்
ஸர்வ-லோக-மஹேஷ்வரம்
ஸுஹ்ருத ம் ஸர்வ-பூதானாம்
      க்ஞாத்வா மாம் ஷாந்திம் ருச்சதி (பகவத் கீதை 5.29)

 

நானே, எல்லா யாகங்களையும், தவங்களையும், இறுதியில் அனுபவிப்பவன் என்றும், எல்லா லோகங்களையும், தேவர்களையும், கட்டுப்படுத்துபவன் என்றும், எல்லா உயிர்வாழிகளின் உற்ற நண்பன் என்றும் அறிந்து, என்னைப் பற்றிய முழு உணர்வில் இருப்பவன், ஜடத்துயரங்களிலிருநது விடுபட்டு அமைதி அடைகிறான் என பகவான் பகவத் கீதையில் கூறுகின்றார்.

 

மனிதனின் எல்லா செயல்களையும் அனுபவிப்பவர் பகவான் கிருஷ்ணரே; அவரே எல்லா லோகங்களுக்கும், தேவர்களுக்கும் உரிமையாளர் என்பதால், மனிதர்கள் அவரது திவ்ய சேவைக்காக அனைத்தையும் அர்ப்பணிக்க வேண்டும். அவரைவிட உயர்ந்தவர் எவருமில்லை. தேவர்களில் தலைசிறந்தவர்களான சிவபெருமானையும் பிரம்மதேவரையும்விட, அவரே சிறந்தவர். வேதங்களில் (ஷ் வேதாஷ், வதர உபநிஷத் 6.7) முழு முதற் கடவுள்,தம் ஈஷ் வராணாம் பரமம் மஹேஷ் வரம் என்று வர்ணிக்கப்படுகிறார். மாயையின் மயக்கத்தால், காணும் எல்லாவற்றிற்கும் தானே எஜமானன் என்று ஜீவன்கள் எண்ணினாலும், உண்மையில் அவர்கள் இறைவனின் ஜட சக்தியால் ஆளப்படுகின்றனர். பகவானே ஜட இயற்கையின் எஜமானர், கட்டுண்ட ஆத்மாக்களோ ஜட இயற்கையின் கடுமையான சட்டங்களுக்கு உட்பட்டவர்கள். இந்த அப்பட்டமான உண்மையினை உணராதவரை, தனிப்பட்ட முறையிலோ பலபேர் ஒன்று கூடியோ, இவ்வுலகில் அமைதியைக் காண்பது சாத்தியமில்லை. இதுவே கிருஷ்ண உணர்வில் அறியப்படுவதாகும். பகவான் கிருஷ்ணரே பரம அதிகாரி, மாபெரும் தேவர்கள் உட்பட எல்லா ஜீவன்களும் அவரது சேவகர்களே. பூரண கிருஷ்ண உணர்வில் மட்டுமே பக்குவமான அமைதியை அடைய இயலும். 

 

பட மூலம்: இஸ்கான்

 

E-mail me when people leave their comments –

You need to be a member of ISKCON Desire Tree | IDT to add comments!

Join ISKCON Desire Tree | IDT