நிமாய் நிதாய் தாஸ் (சென்னை இஸ்கான் ) மறைவு
மறைந்து விட்டார் நிமாய் நிதாய் தாஸ்
அழைத்து கொண்டு விட்டார் கிருஷ்ணா அவர் பாஸ்
இஸ்கான் சென்னைக்கு எத்தனை பெரிய லாஸ்
முக்கியமாக எனக்கு
மிகப்பெரிய இழப்பு
தேஜஸான அவர் முகம்
நெற்றியில் வைணவ திலகம்
தாமிரக் குடுமி குஞ்சலம்
கனல் போன்ற காவி வஸ்த்ரம்
கால் முதல் தலை வரை பவித்ரம்
காண முடியலாம் கிருஷ்ணரை
காண்பது எளிதல்ல அத்தனை
அவரை போன்ற எளிய பக்தரை
இஸ்கான் சென்னை என்று சொன்னால்
நிமாய் உருவம் தான் வரும் கண் முன்னால்
இவ்வுலகத்தில் அவர் பிரவேசம்
ஐரோப்பாவின் பிரான்சு தேசம்
இங்கிலாந்து வந்த போது பயணம்
இஸ்கான் கிருஷ்ணரிடம் அடைந்தார் சரணம்
செய்தார் சேவை தளிகை
பின்பு இந்தியா வருகை
காத்திருந்தது பாத யாத்திரை
நடந்தார் மேற்கு வங்க மாயாபூர் வரை
தொடங்கி குஜராத்தில் மேற்கு கடற்கரை
கவனித்து கொண்டு இழுத்த ரதத்தை
இரண்டு கம்பீர கட்டழகு காளைகளை
மற்றும் ஒட்டாரம் பிடிக்கும் ஒரு ஒட்டகத்தை
பின்பு வந்தார் மாநகர் சென்னை
பார்த்துக்கொள்ள போல அன்னை
ருக்மணி கிருஷ்ணா பாமா தன்னை
காலை மூணு மணிக்கெல்லாம் எழுவார்
இரவு பதினோன்றுக்குத்தான் பாயில் விழுவார்
பொருக்கமாட்டார் துளியும் தாமதம்
செய்வதில் கிருஷ்ணருக்கு நிவேதனம்
நேரம் தவறாம எல்லாம் நடக்கணம்
கிருஷ்ண உணர்வோடுதான் சமைக்கணும்
பிரபு பாதாவின் புத்தகம் படித்து
சொல்லித்தருவார் மேற்கோள் கொடுத்து
ஜெயபதாக சுவாமி வருவார் சென்னை
எல்லோரும் ஓடி தரிசிப்பர் அவர் தன்னை
அவரோ கேட்பார் சென்று பூசாரி அறை
"எப்படி இருக்கிறாய் நிமாய்? உண்டோ ஏதேனும் குறை ?"
வருடம் பத்தொன்பது எண்பத்தி ஆறு
கீழ்பாக்க தோட்ட ரோடு
கோவிலில் நுழைந்தேன் தயக்கத்தோடு
நன்றாக உள்ளது ஞாபகம்
நிமாய் வீசிக்கொண்டிருந்தார் சாமரம்
முடித்து சேவை கிருஷ்ணருக்கு
வந்து நின்றார் பக்கத்தில் எனக்கு
காட்டி அத்தனை பரிவு
புகட்ட ஆரம்பித்தார் கிருஷ்ண உணர்வு
பின்பு பிரசாதம் - கிருஷ்ண உணவு
உட்கார வைத்து மாமர அடியில்
பெரிய தலை வாழை இலையில்
போதும் போதும் என்கிற வரையில்
மறக்க முடியாது என்னால் சாகும் வரையில்
அன்று ஆரம்பித்தேன் பழக
கிருஷ்ண சேவையில் அவருக்கு உதவ
அதை இதை கிருஷ்ணருக்கு வாங்க
மோட்டார் பைக்கில் போவோம் நாங்க
வந்ததும் தருவார் தொன்னையில்
கேசரி மிதக்கும் நெய்யினில்
வாங்கி வரும்போது கிருஷ்ணாவுக்கு பழம்
விழுந்தோம் வண்டியோடு ஒரு தரம்
நிமாய்க்கு கீழ் காலில் எலும்பு முறிவு
எடுத்து யோசித்து நல்ல முடிவு
என் வீட்டில் தங்க வைத்தேன் ஒரு மாதம்
சீராகும் வரை அவர் பாதம்
அன்று சேவை செய்ததின் மூலம்
எனக்கு அத்தனை ஆன்மீக லாபம்
கழுவி இருப்பேன் ஏகப்பட்ட பாபம்
நான் செய்ததோ சின்னஞ்சிறு பணிவிடை
மறக்கவில்லை நிமாய் அதை கடைசி வரை
அக்கரைக்கு இஸ்கான் வந்தது
நான் போவது அடியோடு நின்றது
பார்த்தது கடைசியில்
ரத யாத்திரையில்
காண பட்டார் முகம் வெளுத்து
தேகம் மெலிந்து
சாப்பிடுகிறேன் மருந்து
வருகிறது நோய் குறைந்து
சொன்னார் புன்னகை புரிந்து
போவார் இப்படி திடீர்ரென்று
நினைக்கவில்லையே நான் அன்று
அவர் மேல் எனக்கிருக்கும் அன்பு
தெரிந்தும் அறிவித்தார்கள் எனக்கு
எல்லாம் முடிந்த பின்பு
பயணத்தில் அவர் இறுதி
கலந்து கொள்ளாதது கருதி
கிடக்கிறேன் மிகவும் வருந்தி
வைஷ்ணவர்கள் அடைவதில்லை மரணம்
போக விரும்புவதும் இல்லை வைகுந்தம்
போக தயங்குவதுமில்லை நரகம்
சென்று செய்துகொண்டே இருக்கணும்
ஸ்ரீ கிருஷ்ண சங்கீர்த்தனம்
அது எங்கே எங்கே தேவைப்படுகிறதோ மிகவும்
அது போதும் எப்போதும்
அவர்களுக்கு கிருஷ்ணரிடமிருந்து
பிரிந்திருந்து சேவை செய்வதே அமிர்தம்
இஸ்கான் ஒரு சைத்தன்ய ராணுவம்
ஆயிதம் ஹரே கிருஷ்ண மகாமந்திரம்
மற்றும் பிரபுபாதாவின் பீரங்கி புத்தகம்
அதில் நிமாய் நித்தாய்
ஒரு கடமை தவறா சிப்பாய்
அவருக்கு கிடைத்திருப்பது இட மாற்றம்
சென்றிருக்கலாம் அவர் செய்ய பிரச்சாரம்
அல்லது பிரபு பாதாவுக்கு உபகாரம்
பிரபஞ்சத்தில் வேறு லோகம்
அதுவே என் யூகம்
அதுவே சரியும் ஆகும்
அனந்த கோபால் தாஸ்
Comments