A humble translation of the Sri Tulasi Kirtana lyrics and meaning available in book "Songs of the Vaisnava Acaryas" english edition.
பாடல் வரிகள் (lyrics):
ஸ்ரீ துளசி ஆரத்தி
1. நமோ நம: துளஸீ! க்ருஷ்ண ப்ரேயஸீ
ராதா க்ருஷ்ண ஸேவா பாபோ ஏய் அபிலாஷீ
2. ஜே தோமார ஷரண லோய், தாரா வாஞ்சா பூர்ண ஹோய்
க்ருபா கோரி' கோரோ தாரே ப்ருந்தாவன பாஸீ
3. மோர் ஏய் அபிலாஷ், பிலாஸ் குஞ்சே தியோ வாஸ்
நயனே ஹேரிபோ ஸதா ஜுகல ரூப ராஷி
4. ஏய் நிவேதன தரோ, ஸகீர் அனுகத கோரோ
ஸேவா அதிகார தியே கோரோ நிஜ தாஸீ
5. தீன க்ருஷ்ண தாஸே கோய், ஏய் ஜேன மோர ஹோய்
ஸ்ரீ ராதா கோவிந்த ப்ரேமே ஸதா ஜேன பாஸீ
ஸ்ரீ துளசி ப்ரணாமம்
வ்ருந்தாயை துளஸீ தேவ்யை ப்ரியாயை கேஷவஸ்ய ச
விஷ்ணு பக்தி ப்ரதே தேவி ஸத்யவத்யை நமோ நம:
ஸ்ரீ துளசி ப்ரதக்ஷிண மந்திரம்
யானி கானி ச பாபானி ப்ரஹ்ம ஹத்யாதிகானி ச
தானி தானி ப்ரணஷ்யந்தி ப்ரதக்ஷிண பதே பதே
பொருள் (meaning):
ஸ்ரீ துளசி ஆரத்தி
1. ஓ துளஸீ! க்ருஷ்ணருக்குப் பிரியமானவளே! நான் உன்முன் மீண்டும் மீண்டும் தலை வணங்குகிறேன். ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணரின் சேவையை அடைவதே எனது ஆசை.
2. உனது சரணத்தை எடுத்துக் கொள்பவர் யாராயிருப்பினும், அவரது ஆசைகள் நிறைவேறுகின்றன. உனது கருணையை அவர் மீது காட்டி, அவரை விருந்தாவனவாசியாக மாற்றுகிறாய்.
3. எனது ஆசை என்னவெனில், ஸ்ரீ விருந்தாவன தாமத்தில் உள்ள ஆனந்தத் தோப்புகளில் எனக்கும் ஒரு இடத்தைத் தருவாய் என்பதே. இவ்வாறு எனது பார்வையில், ராதா மற்றும் க்ருஷ்ணரின் அழகிய லீலைகளை எப்பொழுதும் நான் காண்பேன்.
4. நான் வ்ரஜத்தில் உள்ள மாடு மேய்க்கும் பெண்களைப் பின்பற்றும் ஒருவனாக என்னை மாற்ற உன்னிடம் பிச்சை கேட்கிறேன். தயவு செய்து, எனக்கு பக்திசேவைக்கான பாக்கியத்தைத் தந்து, என்னை உனது பணிப்பெண்ணாக மாற்று.
5. இந்த மிகவும் வீழ்ச்சியடைந்த, தாழ்ந்த சேவகன் வேண்டுகிறான், "எப்பொழுதும் ஸ்ரீ ஸ்ரீ ராதா மற்றும் கோவிந்தரின் அன்பில் நான் நீந்த வேண்டும்."
ஸ்ரீ துளசி ப்ரணாமம்
பகவான் கேஷவரின் மிகவும் பிரியமான விருந்தாவிற்கு , ஸ்ரீமதி துளஸீ தேவிக்கு நான் எனது தொடர்ச்சியான நமஸ்காரங்களை அர்ப்பணிக்கிறேன். ஓ தேவதையே! நீ கிருஷ்ணருக்கான பக்தி சேவையை அளிக்கிறாய், மேலும் உன்னிடம் உயர்ந்த உண்மை உள்ளது.
ஸ்ரீ துளசி ப்ரதக்ஷிண மந்திரம்
ஸ்ரீமதி துளசி தேவியை வலம் வரும் போது ஒருவர் செய்திருக்கக்கூடும் அனைத்துப் பாவங்களும், ஒரு பிராமணனைக் கொல்லும் பாவம் கூட, ஒவ்வொரு அடியிலும் அழிக்கப்படுகின்றன.
Replies