1. யஷோமதீ நந்தன, ப்ரஜ பரோ நாகர,
கோகுல ரஞ்ஜன கானா
கோபீ பராண தன, மதன மனோஹர,
காலிய தமன விதானா
2. அமல ஹரிநாம் அமிய விலாஸா
விபின புரந்தர, நவீன நாகர போரா,
பம்ஷீ பதன சுவாஸா
3.ப்ரஜ ஜன பாலன, அசுர குல நாஷன
நந்த கோதானா ராகோவாலா
கோவிந்த மாதவ, நவநீத தஸ்கர,
சுந்தர நந்த கோபாலா
4. ஜாமுனா தடசர, கோபீ பஸன ஹர,
ராஸ ரஸிகா, க்ருபாமோயா
ஸ்ரீ ராதா வல்லப, ப்ருந்தாபன நடபர,
பகதிவினோத் ஆஷ்ரயா
பொருள்:
1. பகவான் கிருஷ்ணர், அன்னை யசோதாவின் பிரியமான மகன்; வ்ரஜ மண்டலத்தின் உன்னதக் காதலன்; கோகுலத்தின் மகிழ்ச்சி; கானா( கிருஷ்ணரின் ஒரு புனை பெயர்); கோபியர்களின் வாழ்வின் சொத்து, காமதேவரின் மனதைக் கூடத் திருடுகிறார் மேலும் காலியா நாகத்தைத் தண்டிக்கிறார்.
2. பகவான் ஹரியின் இந்தத் தூய, புனித நாமங்கள் இனிமையும், அமிர்தமான லீலைகளும் நிறைந்தவை. கிருஷ்ணர் வ்ரஜத்தின் பன்னிரு காடுகளின் பகவான், அவர் என்றும் இளமையானவர் மேலும் காதலர்களில் சிறந்தவர். அவர் எப்பொழுதும் ஒரு குழலில் வாசிக்கிறார், மேலும் அவர் ஒரு சிறந்த ஆடை-அணிந்து-கொள்பவர்.
3. கிருஷ்ணர் வ்ரஜவாசிகளின் பாதுகாவலர்; பல்வேறு அசுர வம்சங்களின் நாசகர்; நந்த மகாராஜரின் பசுக்களை வைத்திருப்பவர் மற்றும் பராமரிப்பவர்; பசுக்களுக்கு, நிலத்திற்கு, மற்றும் ஆன்மீக புலன்களுக்கு இன்பம் தருபவர்; அதிர்ஷ்ட தேவதையின் கணவர்; வெண்ணெய்த் திருடன்; மேலும் நந்த மகாராஜரின் அழகிய மாடுமேய்க்கும் பையன்.
4. கிருஷ்ணர் யமுனையாற்றின் கரைகளில் அலைந்து திரிகிறார். அங்கு குளித்துக் கொண்டிருந்த வ்ரஜத்தின் இளம் பெண்களின்ஆடைகளைத் திருடினார். ராஸ நடனத்தின் ரஸங்களில் அவர் மகிழ்ச்சியடைகிறார்; அவர் மிகவும் கருணையானவர்; ஸ்ரீமதி ராதாராணியின் காதலர் மற்றும் ஸ்ரீமதி ராதாராணியால் காதலிக்கப்படுபவர்; விருந்தாவனத்தின் சிறந்த நடனக்காரர்; மேலும் தாகூரா பக்தி வினோதரின் புகலிடம் மற்றும் ஒரே அடைக்கலம்.
Replies
Hi Can you perform nana sankeerthan a a Krishna temple in Chennai near the airport?