A humble translation of the Sri Guru Vandana available in this page.

புத்தகம்: ப்ரேம பக்தி  சந்திரிகா

எழுதியவர்: நரோத்தம தாஸ தாகூர்

பாடல் வரிகள் (lyrics):

 1. ஸ்ரீ குரு  சரண பத்ம, கேவல பகதி ஸத்ம,

பந்தோ முயி ஸாவதான மதே

ஜாஹார ப்ரஸாதே பாய், ஏ பவ தொரியா ஜாய்

க்ருஷ்ண ப்ராப்தி  ஹோய் ஜாஹா  ஹ'தே

2. குரு  முக பத்ம வாக்ய,சித்தேதே கோரியா ஐக்ய,

ஆர் நா கோரிஹோ மனே ஆஷா

ஸ்ரீ குரு சரணே ரதி, ஏய் ஸே உத்தம கதி

ஜே ப்ரஸாதே பூரே ஸர்வ ஆஷா

3. சகு தான் திலோ ஜேய்,ஜன்மே ஜன்மே ப்ரபு ஸேய்,

திவ்ய ஜ்ஞான் ஹ்ருதே ப்ரோகஷிதோ

ப்ரேம பக்தி ஜாஹா ஹோய்தே ,அவித்யா வினாஷ ஜாதே

வேதே காய் ஜாஹார சரிதோ

4. ஸ்ரீ  குரு கருண ஸிந்து, அதம ஜனார பந்து

லோகநாத் லோகேர ஜீவன

ஹா ஹா ப்ரபு கோரோ தோயா, தேஹோ மோரே பத சாயா,

ஏபே ஜஷ குஷுக் த்ரிபுவன

பொருள் (meaning):

 1.நமது ஆன்மீக குருவின் தாமரைப் பாதங்கள் மட்டுமே நாம் தூய பக்தி சேவையை அடையும் வழியாகும். நான் மிகவும் மரியாதையுடனும், பயபக்தியுடனும் அவரது தாமரைப் பாதங்களுக்கு தலை வணங்குகிறேன். அவரது கருணையால் ஒருவர் இந்த பௌதிகத் துன்பம் என்னும் கடலைக் கடந்து கிருஷ்ணரின் கருணையை அடைய முடியும்.

2.அவரது தாமரைத் திருவாயிலிருந்து வெளிப்படும் வார்த்தைகளால் எனது உணர்வைத் தூய்மைப்படுத்திக் கொள்வதே எனது ஒரே விருப்பம். அவரது தாமரைப் பாதங்களுக்கான பற்றுதலே எல்லா விருப்பங்களையும் பூர்த்தி செய்யும் பக்குவமாகும்.

3. அவர் எனது இருண்ட கண்களைத் திறந்து, மேலும், என் இதயத்தை உன்னத அறிவால் நிரப்புகிறார். ஜென்ம ஜென்மமாய் எனது பகவான் அவரே.அவரிடமிருந்து பரவசப்பிரேமை வெளிப்படுகிறது. வேத சாஸ்திரங்கள் அவரது தன்மையைப் பாடுகின்றன.

4. நமது ஆன்மீக குரு கருணைக் கடல், ஏழைகளின் நண்பன், பக்தர்களின் பகவான் மற்றும் எஜமானர் ஆவார். ஓ எஜமானரே! என்னிடம் கருணையுடன் இருங்கள். உமது தாமரைப் பாதங்களின் நிழலை எனக்குத் தாருங்கள். உமது புகழ் மூவுலகிலும் பரவியுள்ளது.

You need to be a member of ISKCON Desire Tree | IDT to add comments!

Join ISKCON Desire Tree | IDT

Email me when people reply –