A humble translation of the Radhika Stava available in kksongs website.
புத்தகம்: ஸ்தவ மாலா
எழுதியவர்: ரூப கோஸ்வாமி
பாடல் வரிகள் (lyrics):
ராதே ஜெய ஜெய மாதவ தயிதே
கோகுல தருணீ மண்டல மஹிதே
1. தாமோதர ரதி வர்தன வேஷே
ஹரி நிஷ்குட விருந்தா விபினேஷே
2. வ்ருஷபானூததி நவ ஷஷி லேகே
லலிதா சகி குண ரமித விஷாகே
3. கருணாம் குரு மயி கருணா பரிதே
சனக சனாதன வர்ணித சரிதே
பொருள் (meaning):
ஓ ராதே! ஓ மாதவருக்குப் பிரியமானவளே!கோகுலத்தின் எல்லா இளம் பெண்களாலும் வழிபடப்படுபவளே! எல்லாப் புகழும் உனக்கே உரித்தாகட்டும்! எல்லாப் புகழும் உனக்கே உரித்தாகட்டும்!
1. பகவான் தாமோதரருக்கு உன் மேல் இருக்கும் அனபையும் ஈடுபாட்டையும் அதிகரிக்கும் வண்ணம் தனது ஆடைகளை உடுத்திக் கொள்பவளே! ஓ பகவான் ஹரியின் ஆனந்தத் தோப்பாகிய விருந்தாவனத்தின் ராணியே!
2. ஓ மகராஜ் வ்ருஷபானுவின் கடலில் உதித்த புது நிலவே! ஓ லலிதாவின் தோழியே! ஓ உனது அற்புதமான நட்பு,கனிவு, கிருஷ்ணருக்கு உண்மையாயிருத்தல் ஆகிய குணங்களால் விஷாகாவை உனக்கு உண்மையாயிருக்கச் செய்பவளே!
3. ஓ இரக்கம் நிறைந்தவளே! ஓ சனகர் சனாதனர் போன்ற பெரும் முனிவர்களால் தனது தெய்வீக குணங்களை வர்ணிக்கப்படுபவளே! ஓ ராதே தயவு செய்து என்மீது கருணையுடன் இரு!
Replies