A humble translation of the Gaura Arati meaning available in kksongs website. Lyrics are from the book "Biginer's guide to Krishna Consciousness" tamil edition.

புத்தகம்: கீதாவலி

எழுதியவர்: பக்தி வினோத்  தாகூர்

பாடல் வரிகள் (lyrics):

 1. (கிப) ஜய ஜய கோராசாந்தேர் ஆரதிகோ ஷோபா

ஜாஹ்னவீ தட வனே ஜக மன லோபா

1.1 கௌராங்கேர் ஆரத்திக் ஷோபா

ஜக ஜனேர் மன லோபா

2. தகிணே நிதாய்சாந்த், பாமே கதாதர

நிகடே அத்வைத ஸ்ரீநிவாஸ சத்ர தர

3. போஸியாசே கோராசாந்த் ரத்ன ஸிம்ஹாஸனே

ஆரதி கோரேன் ப்ரஹ்மா ஆதி தேவ கணே

4. நரஹரி ஆதிகோரி சாமர துலாய

ஸஞ்ஜய முகுந்த பாஸு கோஷ் ஆதிகாய

5. ஷங்க பாஜே கண்டா பாஜே பாஜே கரதால

மதுர ம்ருதங்க பாஜே பரம ரஸால

5.1 ஷங்க பாஜே கண்டா பாஜே

மதுர் மதுர் மதுர் பாஜே

6. பஹு கோடி சந்த்ர ஜினி வதன உஜ்ஜ்வல

கல தேஷே பன மாலா கோரே ஜலமல

7. ஷிவ  ஷுக நாரத ப்ரேமே கத கத

பகதி வினோத தேகே கோரார ஸம்பத

பொருள் (meaning):

1. எல்லாப் புகழும் பகவான் சைத்தன்யரின் ஆரத்தி நிகழ்ச்சிக்கு உரியதாகட்டும். இந்த கௌர ஆரத்தி ஜானவி (கங்கை) கரையில் உள்ள ஒரு தோப்பில் நடைபெருகிறது. மேலும், இது பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளின் மனதையும் கவருகிறது.

1.1 பகவான் கௌராங்கரின் (சைத்தன்யர்) ஆரத்தியின் பிரகாசம் பிரபஞ்சத்தின் அனைத்து உயிர்வாழிகளின் மனதையும் கவருகிறது.

2. பகவான் சைத்தன்யரின் வலது பக்கத்தில் பகவான் நித்யானந்தர் உள்ளார். மேலும், அவரது இடது பக்கத்தில் ஸ்ரீ கதாதரர் உள்ளார். அருகில் ஸ்ரீ அத்வைதர் நிற்கிறார். மேலும், ஸ்ரீவாஸ தாகூரர் பகவான் சைத்தன்யரின் தலைமீது ஒரு குடையைப் பிடித்துக் கொண்டிருக்கிறார்.

3. பகவான் சைத்தன்யர் ரத்தினங்கள் பதித்த ஒரு சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார். மேலும், பிரம்மா முதலிய தேவர்கள் ஆரத்தி நிகழ்ச்சியை செய்கின்றனர்.

4. நரஹரி ஸரகாரரும் பகவான் சைத்தன்யரின் மற்ற சகாக்களும் அவருக்கு சாமரங்களால் விசுறுகின்றார்கள். மேலும், சஞ்ஜய பண்டிதர், முகுந்த தத்தர் மற்றும் வாஸுகோஸர் முதலிய பக்தர்கள் இனிமையான கீர்த்தனம் பாடுகின்றார்கள்.

5. சங்குகள், மணிகள் மற்றும் கரத்தாளங்கள் எதிரொலிக்கின்றன. மேலும், மிருதங்கங்கள் மிகவும் இனிமையாக இசைக்கின்றன. இந்தக் கீர்த்தன இசை மிக இனிமையானதாகவும், கேட்க ரசிக்கத் தக்கதாகவும் உள்ளது.

5.1. சங்குகள் எதிரொலிக்கின்றன, மணிகள் எதிரொலிக்கின்றன! இனிமை, இனிமை, இனிமை எதிரொலிக்கின்றது!

6. பகவான் சைத்தன்யரின் முகத்தின் பிரகாசம் கோடிக் கணக்கான நிலவுகளை வெல்கிறது. மேலும், அவர் கழுத்தை சுற்றி இருக்கும் வனமாலை பிரகாசிக்கின்றது.

7. பகவான் சிவன், சுகதேவ கோஸ்வாமி, மற்றும் நாரத முனி எல்லோரும் அங்கு உள்ளனர். மேலும், உன்னத அன்பின் பரவசத்தால் அவர்களது குரல்கள் திணறுகின்றன.

இவ்வாறு, பக்தி வினோத தாகூரர் பகவான் ஸ்ரீ சைத்தன்யரின் புகழைக் காண்கிறார்.

You need to be a member of ISKCON Desire Tree | IDT to add comments!

Join ISKCON Desire Tree | IDT

Email me when people reply –